வேன்-லாரி மோதல்; 7 பேர் படுகாயம்
திருத்தணியில் வேன்-லாரி மோதிய விபத்தில் 7 பேர் படு காயம் அடைந்தனர்.
சென்னை,
திருத்தணியை அடுத்த இச்சிபுத்தூரில் தனியார் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு திருத்தணி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தினமும் நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்துள்ள வேனில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலை பணிகள் முடிந்த நிலையில் பெண்கள் வேனில் வீட்டுக்கு திரும்பினர். அந்த வேனை மத்தூரை சேர்ந்த தியாகராஜன் (வயது 25) ஓட்டி வந்தார். அந்த வேன் திருத்தணியில் உள்ள அக்கய்யநாயுடு சாலையில் செல்லும் போது பின்னால் வந்த ஒரு லாரி அந்த வேன் மீது மோதியது.
படுகாயம்
இதில் வேனில் பயணம் செய்த மேல்முரக்கம்பட்டை சேர்ந்த மமதா (30), கீழ் முரக்கம்பட்டை சேர்ந்த நாகராணி (36), பொன்பாடி காலனியை சேர்ந்த தமிழ்செல்வி (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராசாத்தி (23) வேலாங்கண்ணி (40), சத்யா (20) சுபாஷினி (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story