கலெக்டரிடம் கோரிக்கை மனு
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 987 கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
காஞ்சீபுரம்,
தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ., க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், எம்.எல்.ஏக்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, ஆகியோர் கொண்ட குழுவினர் காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பட்டா, பாதாளச்சாக்கடை திட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 987 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு அலுவலகம் தேவைப்படுகிறது என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் ஆவன செய்வதாக தெரிவித்தார்.
பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
8 வழிச்சாலை மக்களை சீண்டி பார்க்கும் திட்டம். இது மக்களுக்கு எதிரான திட்டம். இதை தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story