உடல் நலம் சரியில்லாத உறவினரை பார்க்க முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி பல்லாரிக்கு செல்ல 2 வாரம் அனுமதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


உடல் நலம் சரியில்லாத உறவினரை பார்க்க முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி பல்லாரிக்கு செல்ல 2 வாரம் அனுமதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jun 2019 3:25 AM IST (Updated: 8 Jun 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

உடல் நலம் சரியில்லாத உறவினரை பார்க்க வசதியாக பல்லாரிக்கு செல்ல முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டிக்கு 2 வாரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, மந்திரியாக பணியாற்றியவர் ஜனார்த்தனரெட்டி. அப்போது கனிம சுரங்க தொழில் அதிபரான அவர் அதிகாரம் மிக்கவராக வலம் வந்தார். பல்லாரியில் உள்ள அவருக்கு சொந்தமான கனிம சுரங்க நிறுவனம், முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சுமார் 4 ஆண்டுகள் காலம் சிறையில் இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு, பல்லாரிக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது அடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் பல்லாரியை விட்டு வெளியே வந்து 6 ஆண்டுகள் ஆகிறது. இடையில் அவரது மகள் திருமணத்தின்போது, சில நாட்கள் பல்லாரியில் இருக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

பல்லாரிக்கு செல்ல அனுமதி

இந்த நிலையில் பல்லாரியில் தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்க்க பல்லாரிக்கு செல்ல அனுமதி வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் ஜனார்த்தனரெட்டி சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த விடுமுறை கால அமர்வு நீதிபதிகள், ஜனார்த்தனரெட்டி பல்லாரிக்கு செல்ல 2 வாரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

Next Story