எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 475 பேர் கைது
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 475 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் ரூ.23 கோடியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது.
எனவே அந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து தடையை மீறி நேற்று காலையில் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் உள்ள மேம்பாலம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக மக்கள் கேட்காத ஹைட்ரோ கார்பன், நீட் உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் கேட்கிற மேம்பால திட்டங்களை செயல்படுத்துவது இல்லை. கோவை மாநகர பகுதியில் திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் மேம்பாலங்கள் கட்ட குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.
மேம்பாலங்கள் கட்டுவதில் தவறு இல்லை. ஆனால் அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் மேம்பாலங்கள் கட்டும்போது போக்குவரத்து நெரிசல்தான் ஏற்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பால திட்டம் போடப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக மேம்பால பணிகளை முடிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.ஐ.எச்.எஸ். மேம்பாலத்தின் இருபுறத்திலும் சேவைசாலை போட நிலம் கையகப்படுத்த வில்லை என்பதால் அந்த பகுதியை சேர்ந்த 60 குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்று உள்ளனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் மேம்பால பணிகளை எப்போதே முடித்து இருக்கலாம். ஆனால் அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களின் ஒரே கோரிக்கை மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்பதுதான். இனியும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்பதால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.நடராஜன் எம்.பி., நா.கார்த்திக் எம்.எல்.ஏ. உள்பட 475 பேரை போலீசார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த எஸ்.எம்.சாமி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கணபதி சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க.வை சேர்ந்த பீளமேடு பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சுசி கலையரசன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி, கொ.ம.தே.க. உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story