திருப்புல்லாணி யூனியன் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோக பணிகளை கலெக்டர் ஆய்வு


திருப்புல்லாணி யூனியன் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோக பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jun 2019 5:11 AM IST (Updated: 8 Jun 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்புல்லாணி யூனியன் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோக பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்,

கோடைகாலத்தில் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்கள் சிரமப்படாத வகையில் சீரான குடிநீர் வினியோகம் செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் குடிநீர் வினியோகம் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யும் விதமாக மாவட்ட கலெக்டர் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக திருப்புல்லாணி பகுதியில் கிழக்குகடற்கரை சாலை பிரதான பகுதியில் அமைந்துள்ள காவிரி கூட்டுக்குடிநீர் வால்வில் இருந்து தண்ணீர் கசிவு அதிகம் உள்ள இடங்களில் குடிநீர் குழாய் அமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது சின்னபாளையரேந்தல் கிராம பெண்களின் கோரிக்கையை ஏற்று கீழக்கரை நகராட்சிக்கு செல்லும் ககுழாயில் ஏர்வால்வு பகுதியில் திருகு குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தில்லையேந்தல் ஊராட்சியில் ஆய்வுசெய்தபோது மருதந்தோப்பு கிராமம் மற்றும் மீனாட்சிபுரம் கிராம பகுதிகளில் சுமார் 74 குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் முறையே குடிநீர் நிரப்பி சீரான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்ய வேண்டும் எனஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதுதவிர அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் இதர தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக புதிய உறைகிணறு அமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மல்லல் ஊராட்சியில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், அந்த ஊராட்சியில் உள்ள மூஞ்சான் கிராமமானது காவிரி கூட்டு குடிநீர் தண்ணீர் வரும் கடைநிலை கிராமம், எனவே குடிநீர் வினியோகத்தினை முறையே கண்காணித்து சீரான குடிநீர் வழங்கப்பவதை உறுதி செய்யவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அந்த கிராமத்தில் புதிதாக உறைகிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வுசெய்த மாவட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிசெயற்பொறயாளர் முத்துகிருஷ்ணன்,வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ராஜா, மங்களேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் ஜம்புமுத்துராமலிங்கம் உட்பட அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story