கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை வைகோ பார்வையிட்டார்
கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை வைகோ பார்வையிட்டார்.
திருவேங்கடம்,
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய மருத்துவ தர நிர்ணய குழு ஆய்வு செய்ய உள்ளது. இந்த நிலையில், அந்த சுகாதார நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து உள்ளார். அங்கு நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை அவர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் மருத்துவ அலுவலர்களிடம் சுகாதார நிலையத்துக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற தினமும் ஏராளமான கிராம மக்கள் வருகிறார்கள். மருத்துவ அலுவலர்கள் கடுமையாக உழைத்ததன் பயனாக தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட தேசிய மருத்துவ தர நிர்ணய குழு வர உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சுகாதார நிலையம் மட்டுமே இதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசு ஆஸ்பத்திரி, அரசு பள்ளிகளை பொதுமக்கள் நாடி வரத்தொடங்கி உள்ளனர். இது மேலும் வளர வேண்டும். இந்த நிலைக்கு உயர பாடுபட்ட மருத்துவ அலுவலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story