சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர்ந்து செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிவதை கவனித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரின் பையை சோதனை செய்தனர்.
சோதனையில் அவரிடம் 4 விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர் ஆவடி, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பப்லு என்ற முகமது யூசுப்(வயது 28) என்பதும், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது யூசுப்பை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story