ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 872 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளினை 3 ஆயிரத்து 872 பேர் எழுதினர்.
புதுக்கோட்டை,
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் எழுத மொத்தம் 4 ஆயிரத்து 387 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 872 பேர் எழுதினர். இதில் 515 பேர் தேர்வு எழுதவரவில்லை.
தேர்வு எழுதுபவர்கள் காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். மேலும் தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆவுடையார் கோவில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா நேரில் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-வது தாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

Related Tags :
Next Story