பனங்குடி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம்


பனங்குடி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 8 Jun 2019 10:45 PM GMT (Updated: 8 Jun 2019 8:26 PM GMT)

பனங்குடி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், பனங்குடி கிராமத்தில் குருந்துடைய அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, சின்னமாடு என 2 பிரிவாக போட்டிகள் நடைபெற்றது. பெரியமாடு போகவர 8 கிலோ மீட்டர் தூரமும், சின்னமாடு போக வர 6 கிலோ மீட்டர் என போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய மாட்டு வண்டி பிரிவில் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை ஆட்டுகுளமான் மலையான் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை துறையூர் வசந்த்பிரியன் மாட்டு வண்டியும், நான்காம் பரிசை பாப்பான்வயல் ஜெய்தீரன் மாட்டு வண்டியும் பெற்றன.

பரிசு

சின்ன மாட்டு வண்டி பிரிவில் 20 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி இரண்டு பிரிவாக நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் பரிசை புதுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாட்டு வண்டியும், தேனீ மாவட்டம் உத்தமபாளையம் தங்கம் ரேடியோஸ் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை சொக்கலிங்கபுதூர் ராமன் கோனார் நினைவாக சக்தி மாட்டு வண்டியும், கோரவளையன்காடு முத்துகிருஷ்ணன் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை பனங்குடி ராமசாமிதேவர் மாட்டு வண்டியும், பாதரகுடி மனோஜ்குமார் மாட்டு வண்டியும் பெற்றன.

தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியை திரளான பொதுமக்கள், ரசிகர்கள் கண்டு களித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story