குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 2,474 பேர் எழுதினர்


குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 2,474 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வை 2,474 பேர் எழுதினர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் நேற்று ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி, டதி மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, குளச்சல் செயிண்ட் மேரிஸ் பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முன்சிறை, கொல்லங்கோடு என 7 மையங்களில் ஆசிரியர் தகுதிக்கான தேர்வு நடந்தது.

தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணிக்கு மையங்களுக்கு வருகை தந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்பு தேர்வு மையத்துக்குள் 8.30 மணிக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். உள்ளே கொண்டு செல்ல 2 பந்து முனை பேனாக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

2,474 பேர் வருகை

தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல் முருகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 14 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. இடையே வெளியே செல்ல அனுமதி வழங்கவில்லை. தேர்வு நேரம் முடிந்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 2,852 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் நேற்று 378 பேர் தேர்வுக்கு வருகை தரவில்லை. இதனால் தேர்வை 2,474 பேர் எழுதினர். மேலும் 2-ம் தாள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 

Next Story