குமரி மாவட்டத்தில் 20 தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு


குமரி மாவட்டத்தில் 20 தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 20 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டு உள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 20 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பிறப்பித்து உள்ளார். அதன்படி தோவாளை தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) அருளரசு நாகர்கோவிலுக்கு (முத்திரை) மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நாகர்கோவில் தனி தாசில்தார் (நத்தம் அலகு-1) ராஜ மனோகரன் கிள்ளியூருக்கு (சமூக பாதுகாப்பு திட்டம்) மாற்றலாகி உள்ளார்.

மேலும் ஜாய் சரோஜா (நத்தம் அலகு-2) விளவங்கோடுக்கும் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு), கிள்ளியூர் தனி தாசில்தார் இக்னேஷியஸ் சேவியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நாகர்கோவிலுக்கும் (ஆதி திராவிடர் நலம்), இயற்கை பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தார் சுரேஷ்குமார் விளவங்கோடுக்கும் (சமூக பாதுகாப்பு திட்டம்), விளவங்கோட்டில் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பணியாற்றி வந்த ராஜா நாகர்கோவிலுக்கும் (இலங்கை அகதிகள் பிரிவு) மாற்றலாகி உள்ளனர்.

இதே போல பறக்கும் படை தாசில்தார் அப்துல்லாமன்னான் நாகர்கோவிலுக்கும் (நத்தம்-3), பத்மநாபபுரம் தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) தாஜ்நிஷா உசூர் மேலாளராகவும் (குற்றவியல்), தனி தாசில்தார் சதானந்தன் பறக்கும் படைக்கும், விளவங்கோடு தனி தாசில்தார் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) திருவாழி தோவாளைக்கும் (சமூக பாதுகாப்பு திட்டம்), நாகர்கோவில் தனி தாசில்தார் (முத்திரை) இசபெல் வசந்தி ராணி விளவங்கோடுக்கும் (முத்திரை), விளவங்கோடு தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) சஜித் பத்மநாபபுரம் கோட்ட ஆய அலுவலராகவும், நாகர்கோவில் கோட்ட ஆய அலுவலர் தினேஷ்சந்திரன் பத்மநாபபுரம் தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதோடு நாகர்கோவில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மூர்த்தி மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளராகவும், பத்மநாபபுரம் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுதா விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரியாகவும், நாகர்கோவில் இலங்கை அகதிகள் பிரிவில் பணியாற்றி வந்த விஜயலட்சுமி தனி தாசில்தாராகவும் (நத்தம் அலகு-1), உசூர் மேலாளர் (குற்றவியல்) கண்ணன் பத்மநாபபுரம் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி பாபுரமேஷ் நாகர்கோவில் கோட்ட ஆய அலுவலராகவும், கோட்ட ஆய அலுவலர் ஜெகதா தனி தாசில்தாராகவும் (இயற்கை பேரிடர் மேலாண்மை), மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த அஜிதா நாகர்கோவில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் கன்னியாகுமரி துணை தாசில்தார் கண்ணன் நாகர்கோவில் தனி தாசில்தாராக (நத்தம்-3) பதவி உயர்வு பெற்றுள்ளார். 

Next Story