கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வினை 2,237 பேர் எழுதினர்


கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வினை 2,237 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 8 Jun 2019 10:30 PM GMT (Updated: 8 Jun 2019 9:18 PM GMT)

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளுக்கான தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளுக்கான தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. இந்த தேர்வினை எழுத 2,521 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர் களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று காலை முதலே தேர்வு மையங்களுக்கு பலரும் ஆர்வத்துடன் வருகை தந்தனர். செல்போன், பேஜர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் , கைப்பை போன்றவற்றை தேர்வறைக்கு எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. இதனால் அவற்றை தேர்வறையின் வெளியே பத்திரமாக வைத்து விட்டு அனைவரும் தேர்வறைக்குள் சென்றனர். கரூர் மாவட்டத்தில் 2,237 பேர் முதல் தாள் தேர்வினை எழுதினர். 284 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வின்போது ஒழுங்கீன செயல்களில் யாரும் ஈடுபடுகின்றனரா? என்பதை அதிகாரிகள் கண்காணித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தாள் தேர்வை 19 தேர்வு மையங்களில் 6,810 தேர்வர்கள் எழுதஉள்ளனர். தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Next Story