திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கியது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கி நடந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்திக்கு தாசில்தார் வில்சன் தலைமை தாங்கினார். இதில் உதவி கலெக்டர் பெருமாள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
ஜமாபந்தியின் முதல் நாளில் ஊத்துக்கோட்டை, தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர், பனபாக்கம், சென்னன்காரணை, தொளவேடு, தண்டலம், பருத்திமேனிகுப்பம், தும்பாக்கம், காக்கவாக்கம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம் கோரி போட்டி போட்டு கொண்டு மனுக்கள் அளித்தனர்.
பொன்னேரி
இதேபோல் பொன்னேரியில் உதவி கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்த ஜமாபந்தியில் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், தாசில்தார்கள் புகழேந்தி, சங்கிலிரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜமாபந்தியின் முதல் நாளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.கே.பேட்டை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் நடந்த ஜமாபந்திக்கு மாவட்ட உதவி ஆணையர் (கலால்) செல்வம் தலைமை தாங்கினார். திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வெங்கடராஜுகுப்பம், வெளிகரம், திருமலராஜுபேட்டை, புதுப்பட்டு, ஈச்சம்பாடி, இருதலைவாரிபட்டடை, தளவாய்பட்டடை உள்பட 9 கிராமங்களின் வருவாய் கணக்குகள் முடிக்கப்பட்டன.
அதேபோல் ஆர்.கே. பேட்டை தாலுகாவிலும் ஜமாபந்தி நடந்தது. இதில் திருத்தணி ஆர்.டி.ஓ. பவனந்தி தலைமை தாங்கினார். இதில் சந்தான வேணுகோபாலபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சத்தியராஜ் தலைமையில் கிராம மக்கள், வாக்குச்சாவடி மையத்தை மாற்றுவது தொடர்பாக மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஜமாபந்தி அதிகாரி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி மனுக்களை அளித்தனர். மனுக் களை பெற்றுகொண்ட கலெக் டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, தாசில்தார்கள் சீனிவாசன், மதன்குப்புராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story