பராமரிப்பு பணி: மின்சார ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் தமிழக ரெயில்கள் கல்யாண் செல்லாது


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் தமிழக ரெயில்கள் கல்யாண் செல்லாது
x
தினத்தந்தி 9 Jun 2019 3:38 AM IST (Updated: 9 Jun 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கல்யாண் செல்லாமல் திவா-பன்வெல்-கர்ஜத் வழியாக இயக்கப்பட உள்ளது.

மும்பை,

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி மற்றும் பாந்திரா இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.40 மணி முதல் மாலை 4.10 மணி வரை இருமார்கத்திலும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷிக்கு ரெயில்கள் இயக்கப்படாது.

இதேபோல் காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரி மற்றும் கோரேகாவுக்கு ரெயில்கள் இயக்கப்படாது.

காலை 9.53 முதல் மதியம் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும், காலை 10.45 முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், அந்தேரி மற்றும் பாந்திராவிலிருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில் சேவை இருக்காது. எனினும் இந்த நேரத்தில் பன்வெல்-குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சாந்தாகுருஸ்-கோரேகாவ் இடையே இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில சி.எஸ்.எம்.டி.-கல்யாண் இடையே வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்படும். எனினும் கல்யாண்-அம்பர்நாத் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் கல்யாண்-பத்லாப்பூர் இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. மேலும் வெளியூர் செல்லும் விரைவு ரெயில்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கல்யாண் வழியாக செல்லும் சி.எஸ்.எம்.டி.-நாகர்கோவில், சி.எஸ்.எம்.டி.-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திவா-பன்வெல்-கர்ஜத் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் திவா ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும் கோயமுத்தூர்-திலக்நகர் டெர்மினஸ் விரைவு ரெயில், சென்னை சென்ட்ரல்-சி.எஸ்.எம்.டி. ரெயில் கர்ஜத் - பன்வெல் - திவா வழியாக இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story