காட்பாடியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவன் பலி
காட்பாடியில்குளிக்கச்சென்றமாணவன்கல்குவாரி குட்டையில்மூழ்கி பலியானான்.
காட்பாடி,
பழையகாட்பாடி பஜனைகோவில்தெருவை சேர்ந்தவர்சங்கர். இவருடையமனைவி காமாட்சி. இவர்களுடைய மகன் நெடுமாறன் (வயது 10).அதேப்பகுதியில்உள்ள அரசுநடுநிலைப்பள்ளியில்6-ம்வகுப்பு படித்து வந்தான்.
நேற்றுமுன்தினம்பள்ளி விடுமுறைஎன்பதால்தனது நண்பர்களுடன்குளிக்கச்சென்றான். அங்குள்ள ஒருகல்குவாரி குட்டையில்குளித்துள்ளனர். அப்போது நெடுமாறன் ஆழமானபகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவன் தண்ணீரில் மூழ்கி விட்டான்.
குளிக்கச்சென்றமகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் சென்று பல்வேறு இடங்களில் தேடினர். அப்போதுகல்குவாரி குட்டைஅருகே மாணவன் நெடுமாறனின் உடைகள் இருந்தது.
எனவே மாணவன் நெடுமாறன்கல்குவாரி குட்டையில்தான்மூழ்கியிருப்பான் என்றுகருதி காட்பாடி போலீஸ்நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்றுகல்குவாரி குட்டையில்இறங்கி தேடினர்.
அப்போது நேரம் இருட்டி விட்டதால் தேடும்பணியை கைவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும்மாணவனை தேடும்பணியில் ஈடுபட்டனர். அப்போது நெடுமாறன் தண்ணீருக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். பின்னர்பிரேத பரிசோதனைக்காகமாணவனின் உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்துகாட்பாடி போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story