கொள்ளிடத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை உறவினர்கள் 2 பேர் கைது
கொள்ளிடத்தில் ஓட, ஓட விரட்டி கல்லூரி பஸ் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பரவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் நடராஜமணி(வயது40). இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களது மகள் கிருத்திகா(3½). நடராஜமணி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தனது குழந்தையை பள்ளியில் சேர்க்க கடந்த சில நாட்களுக்கு முன் நடராஜமணி சென்னையில் இருந்து கொள்ளிடத்துக்கு வந்தார். நேற்றுமுன்தினம் இரவு கொள்ளிடம் ரெயில்வே கேட் அருகே நடராஜமணி, அதே ஊரை சேர்ந்த தனது உறவினர்களான பாலையா மகன் கார்த்திக்(32), ராமசாமி மகன் சத்யா(33) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதன்பின் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
நேற்று காலை கொள்ளிடம் ரெயில் நிலையம் அருகே நடராஜமணி நடந்து சென்று கொண்டிருந்தனர். இவருக்கு எதிரில் கார்த்திக் நடந்து வந்தார். அப்போது நடராஜமணி, கார்த்திக் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை கேள்விப்பட்டு அங்கு சத்யா வந்தார். அப்போது கார்த்திக், சத்யா ஆகியோரிடம் நடராஜமணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், சத்யா ஆகிய இருவரும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் நடராஜமணியை வெட்ட முயன்றனர். உடனே நடராஜமணி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இருப்பினும் கார்த்திக், சத்யா ஆகிய இருவரும் நடராஜமணியை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஒருவரை 2 பேர் ஓட, ஓட விரட்டி வெட்டியதை கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் இருந்து சிதறி ஓடினர். ஆனால் கார்த்திக்கும், சத்யாவும் விடாமல் துரத்தி சென்று நடராஜமணியை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நடராஜமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து கார்த்திக்கும், சத்யாவும் தப்பி ஓடி விட்டனர்.
தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் மற்றும் சத்யாவை தேடினர். இந்தநிலையில் கொலையாளிகள் கொள்ளிடம் அருகே ஒரு பகுதியில் மறைந்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கார்த்திக் மற்றும் சத்யாவை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டப்பகலில் டிரைவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story