வாடகை வீட்டை காலி செய்த போது ரூ.20 லட்சம் பொருட்களை சேதப்படுத்தியதாக நடிகர் யஷ் மீது போலீசில் புகார்


வாடகை வீட்டை காலி செய்த போது ரூ.20 லட்சம் பொருட்களை சேதப்படுத்தியதாக நடிகர் யஷ் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 10 Jun 2019 4:15 AM IST (Updated: 10 Jun 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வாடகை வீட்டை காலி செய்த போது ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக நடிகர் யஷ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர் நடித்த கே.ஜி.எப். படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் நடிகர் யஷ், பெங்களூருவில் முனிபிரசாத் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வீட்டை காலி செய்யும்படி நடிகர் யஷ்சிடம், உரிமையாளர் முனிபிரசாத் கூறினார். ஆனால் வீட்டை காலி செய்ய நடிகர் யஷ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு பிரச்சினை உண்டானது. மேலும் இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் யஷ் மீது, உரிமையாளர் முனிபிரசாத் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடகை வீட்டை காலி செய்யும்படி நடிகர் யஷ்சுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் யஷ் வாடகை வீட்டை காலி செய்து விட்டார். மேலும் வீட்டின் உரிமையாளருக்கு வழங்கவேண்டிய வாடகை பாக்கி தொகையையும் அவர் கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் முனிபிரசாத் நடிகர் யஷ், அவரது தாய் உள்பட சிலர் மீது போலீசில் ஒரு புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

கோர்ட்டு உத்தரவுப்படி வீட்டை காலி செய்த போது நடிகர் யஷ், அவரது தாய் உள்பட சிலர் வீட்டின் சமையல் அறை, வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த அலங்கார மின்விளக்குகள், வீட்டில் உள்ள சில பொருட்கள் என ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி சென்றதாக கூறப்பட்டு இருந்தன. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார் கள்.

Next Story