பொதுத்தேர்வில் தோல்வி 10-ம் வகுப்பு மாணவன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பொதுத்தேர்வில் தோல்வி 10-ம் வகுப்பு மாணவன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2019 4:15 AM IST (Updated: 10 Jun 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.

மும்பை,

மும்பை கோவண்டியை சேர்ந்த மாணவன் அப்துல் அன்சாரி (வயது16). 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தான். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவின் போது அவன் தோல்வி அடைந்தான்.

இதனால் விரக்தி அடைந்த மாணவன் அப்துல் அன்சாரி தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர்.

தகவல் அறிந்து வந்த சிவாஜிநகர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாக்கிநாக்காவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கஜல் (16). இவளும் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தாள். இதனால் மனஉளைச்சல் அடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டாள்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வில் தோல்வி அடைந்ததற்காக மாணவன், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story