மழவன்சேரம்பாடியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
மழவன்சேரம்பாடியில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்டது மழவன்சேரம்பாடி. இந்த பகுதி அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையோரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தொடக்கத்தில் மண் சாலை மட்டுமே இருந்து வந்தது. மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி வந்ததால், அந்த சாலையை மாற்றிவிட்டு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மழவன்சேரம்பாடியில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ள பகுதி முதல் காவயல் பகுதி வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆண்டுகள் பல கடந்தோடிவிட்டதால், தற்போது அந்த சாலை மிகவும் பழுதடைந்து விட்டது. குண்டும், குழியுமாக சாலை மாறிவிட்டதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் அபாய நிலை காணப்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
மழவன்சேரம்பாடிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் அவசர தேவைக்கு கூட அங்கு வாகனங்களை இயக்கி செல்ல முடியாத நிலை உள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரி வாகனங்களும் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி பழுதடைந்து நடுவழியில் நிற்கும் அவலநிலை தொடர்கிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story