பொதுமக்கள் குற்றங்களை தடுக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அமைச்சர் தங்கமணி பேச்சு
பொதுமக்கள் குற்றங்களை தடுக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் சிறார் நீதிக்குழுமம் ஆகியவற்றில் நூலகம் திறப்பு விழா, பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நம் காவல் செல்போன் செயலி சேவை மற்றும் போலீசாரின் பயன்பாட்டிற்கான ஹாப்ஸ்-ஐ செல்போன் செயலி சேவை தொடக்க விழா, தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நாமக்கல் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு வரவேற்று பேசினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீசாரின் பயன்பாட்டிற்கான ஹாப்ஸ்-ஐ செயலியின் சேவையை சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நம காவல் செயலி சேவையை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தொடங்கி வைத்து, சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போலீஸ் நிலையங்கள் மற்றும் சிறார் நீதி குழுமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நூலகத்தை திறந்து வைத்தும், அவற்றிற்கு புத்தகங்களை வழங்கியும், ரத்ததானம் செய்த போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த நிகழ்வு காவல்துறையினர் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் அமைந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதலில் குற்றங்களை குறைக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது ரத்ததானம் வழங்குவது உயிரை காக்கும் நிகழ்வாக அமைந்து உள்ளது.
பொதுவாக காவல்துறை என்றால் ஒரு அச்ச உணர்வு இருக்கும். அந்த அச்சத்தை போக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்து உள்ளது. தற்போது பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு அதிகரித்து உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
நமது மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அதிகாரிகள் உள்ளனர். ரத்ததானம் எவ்வளவு சிறந்தது என்பது விபத்தில் சிக்கிய நபர்களின் குடும்பத்தாரிடம் கேட்டால் தெரியும். நமது மாவட்டத்தில் தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற போலீசார் தான் முக்கிய காரணம் . இதில் ஊர்க்காவல் படைவீரர்களின் பங்கும் உள்ளது. பொதுமக்களும் குற்றங்களை தடுக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நகராட்சி ஆணையாளர் சுதா, முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், அரசு வக்கீல் தனசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற ரத்ததான முகாமில் போலீசார், ஊர்க்காவல்படையினர் என மொத்தம் 50 பேர் ரத்ததானம் செய்தனர். முடிவில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி நன்றி கூறினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட சின்ராஜ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிகாரிகள் யாரும் என்னை புறக்கணிக்கவில்லை. ஏனெனில் நான் வெற்றிபெற்ற நாள் முதல் பொது சொத்தாக மாறிவிட்டேன். நன்றி தெரிவிக்க செல்லும் இடங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். அதிகாரிகளுடன் ஆலோசித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் தொகுதி மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளேன் என்றார்.
நம் காவல் செல்போன் செயலியில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், குறிப்பிட்ட வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியும் எனவும், ஹாப்ஸ்-ஐ செயலி மூலம் சந்தேக நபரை புகைப்படம் எடுத்தால், அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பதை அறிய முடியும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story