சேலத்தில் டாஸ்மாக் கடைக்குள் பீர் பாட்டில் வீசிய வாலிபர் விற்பனையாளர் கைவிரல் துண்டானது
சேலத்தில் டாஸ்மாக் கடைக்குள் வாலிபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசினார். இதில் கடைக்குள் இருந்த விற்பனையாளரின் கைவிரல் துண்டானது.
சேலம்,
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வெங்கடப்பன் தெருவில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் 12 மணிக்கு விற்பனையாளர்களான இளம்பிள்ளையை சேர்ந்த செந்தில், அல்லிக்குட்டையை சேர்ந்த முருகேசன் ஆகியோர் வந்து கடையை திறந்தனர். அப்போது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், பீர் பாட்டில் கடனாக ேகட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கோபத்துடன் சென்ற அந்த வாலிபர், நண்பரிடம் பணம் வாங்கி வந்து பீர் பாட்டிலை வாங்கி குலுக்கி, அங்கிருந்த விற்பனையாளர் மீது வீசினார்.
இதில், செந்திலின் கையில் பீர் பாட்டில் பட்டு அவரது கட்டை விரல் துண்டாகி ரத்தம் வழிந்தது. இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாய்ேபட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், டாஸ்மாக் கடைக்குள் பீர் பாட்டிலை வீசிய வாலிபர், ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, விரல் துண்டான டாஸ்மாக் கடை விற்பனையாளர் செந்தில், உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ெபற்று வருகிறார்.
டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை வசூலித்து வருவதாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விற்பனையாளர் மீது வாலிபர் பீர் பாட்டிலை வீசியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், டாஸ்மாக் கடைக்குள் பீர் பாட்டிலை வீசி தகராறில் ஈடுபட்டது தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story