கோட்டாம்பாளையம் குடியிருப்பில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
வேங்கிக்கால் கோட்டாம்பாளையம் குடியிருப்பில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்யப்பட்டது. இதனை முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் பஞ்சாயத்து கோட்டாம்பாளையம் குடியிருப்பில் இருந்து 10 மாணவர்கள் வேங்கிக்கால் புதூர் குடியிருப்பில் உள்ள பள்ளிக்கு தினமும் இடை நிற்றல் இல்லாமல் வருகை புரிய வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கோட்டாம்பாளையம் குடியிருப்பில் உள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன வசதியை நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், இலை போல் பசுமையாய் கல்வியை தொடரும் வகையில் இலையசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வன், பள்ளி துணை ஆய்வாளர் குமார், வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதி, பவானி, திருவண்ணாமலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சின்னராஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபாதேவி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தென்மாத்தூர் பஞ்சாயத்து செட்டிக்குளம் குடியிருப்பு பகுதியில் இருந்து 24 மாணவர்கள் உடையானந்தல் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி தொடங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுனர் உமாதேவி, பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story