திருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 85 பேர் மீது வழக்கு


திருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 85 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Jun 2019 10:15 PM GMT (Updated: 10 Jun 2019 6:55 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

85 பேர் மீது வழக்கு

இதில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், ராஜேந்திரன், நகர செயலாளர் ரகுராமன் உள்ளிட்ட 85 பேர் மீது திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்தி குமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story