சேதுபாவாசத்திரத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சேதுபாவாசத்திரத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் உள்ளன.
தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடல் சீற்றம்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. கடலோர கிராமங்களில் சூறைக்காற்றும் வீசி வருகிறது. கடலில் 4 அடி முதல் 6 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி வருகின்றன.
இதனால் வழக்கமாக கடலுக்கு செல்ல வேண்டிய 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகுகளை மீனவர்கள் மீன்பிடி துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story