விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 60). விவசாயி. இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் மத்திகிரி அருகே அச்செட்டியில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோபால் இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (24). இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த லோகேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லோகேஷ் இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story