மாவட்ட செய்திகள்

திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் சாவு; 6 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை + "||" + In Thiruvallikkeni Lodge drink Poison teacher Death; Wife and a lovable girlfriend get treatment

திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் சாவு; 6 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை

திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் சாவு; 6 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை
சென்னை லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, 6 வயது மகள் மற்றும் கள்ளக்காதலி ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று முன்தினம் ஒரு சிறுமி, 2 பெண்களுடன் ஒருவர் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை அவர்கள் தங்கிய அறை வெகு நேரமாகியும் திறக்காததால், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.


அப்போது அவர்கள் 4 பேரும் மயக்கம் அடைந்து கிடந்தனர். இதையடுத்து விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும், மற்ற 3 பேரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மாங்கரை வாளிபிலாவிளை பகுதியை சேர்ந்த சின்னையன் மகன் ஜெகத் பிராங்கிளின் (வயது 30), அவருடைய மனைவி புனிதா ராணி (29), 6 வயது மகள் ஜெசிபி ஆகியோர் என்பதும், இன்னொரு பெண் பக்கத்து வீட்டை சேர்ந்த வைகுண்ட ரமேஷ் மனைவி சரண்யா (22) என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் ஜெகத் பிராங்கிளின் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி உட்பட 3 பேரும் மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய மேல் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

ஜெகத் பிராங்கிளின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். அவரது பக்கத்து வீட்டில் சரண்யா வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஜெகத் பிராங்கிளின் ஊருக்கு வரும்போதெல்லாம் சரண்யாவை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இவர்களது ரகசிய உறவு இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இருவரும் ஊரை விட்டு வெளியேறுவதும், போலீசார் உதவியுடன் உறவினர்கள், இருவரையும் அழைத்து வந்து அறிவுரை கூறி அனுப்பி வைப்பதும் அடிக்கடி நடந்துள்ளது.

இதற்கிடையே தான் ஜெகத் பிராங்கிளின், தன்னுடைய மனைவி புனிதா ராணி, மகள் ஜெசிபி, கள்ளக்காதலி சரண்யா ஆகியோருடன் சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜெகத் பிராங்கிளின் தன்னுடைய மனைவி, மகள், கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு சென்னை வந்ததாகவும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விஷம் குடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெகத் பிராங்கிளின் வழக்கம் போல தன்னுடைய கள்ளக்காதலி சரண்யாவுடன் சென்னைக்கு ஓடி வந்ததாகவும், அவர் விடுதியில் தங்கி இருந்ததை அறிந்த அவருடைய மனைவி, மகளை அழைத்துக் கொண்டு அந்த விடுதிக்கு வந்ததாகவும் அங்கு நடந்த தகராறில் அனைவரும் சாக முடிவெடுத்து விஷம் குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னைக்கு குடும்பத்துடன் வந்த ஜெகத் பிராங்கிளின், தன்னுடைய நண்பர் அர்ஜூன் என்பவரை விடுதிக்கு வரவழைத்துள்ளார். அர்ஜூன் வந்து பார்த்தபோது, ஜெகத் பிராங்கிளின் சற்று மயங்கிய நிலையில் இருந்ததாகவும், மற்றவர்கள் குளியல் அறையில் கதவை பூட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அர்ஜூன் கேட்டதும், ஜெகத் பிராங்கிளினும் குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகவும், விடுதி ஊழியர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புனிதா ராணி, சரண்யா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயல்பு நிலைக்கு வந்த பிறகுதான் நடந்த விவரங்கள் முழுமையாக தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

ஆசிரியர் ஒருவர் மனைவி, மகள், கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டதால் பரபரப்பு
கரூர் அருகே மாயமான நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை செய்யப்பட்டனர். நிதி நிறுவன அதிபரின் அக்காள் வீட்டுக்கு அருகே புதைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
2. கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக் கட்டிய கணவர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
கொடைக்கானல் அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக்கட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
3. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவரின் மனைவி சென்ற கார் விபத்தில் சிக்கியது
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் மனைவி சென்ற கார் விபத்தில் சிக்கியது.
4. ஆண்டிப்பட்டி அருகே, வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்திய கணவர் கைது - மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை முதியோர் இல்லத்தில் அடையாளம் கண்ட மனைவி
கேரளாவில் 36 ஆண்டுகளாக பிரிந்திருந்த தம்பதி முதியோர் இல்லத்தில் மீண்டும் இணைந்த ஆச்சரியமூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...