மீன்கள் செத்து மிக்க காரணம் என்ன? கனகன் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு


மீன்கள் செத்து மிக்க காரணம் என்ன? கனகன் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:15 AM IST (Updated: 11 Jun 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

மீன்கள் செத்து மிதக்க காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை கனகன் ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார். அப்போது ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் சுற்றுச்சூழல் துறையின் மூத்த பொறியாளர் ரமேஷ் தலைமையில் அறிவியல் ஆய்வாளர் சுமதி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுந்தர், மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி ஆகியோர் நேற்று கனகன் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

கனகன் ஏரியில் இருந்த தண்ணீர் மற்றும் செத்த மீன்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். ஏரி தண்ணீர் முதல்கட்டாக சுற்றுச்சூழல் துறையின் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

இருந்தபோதிலும் இறந்த மீன்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்குள்ள ஆய்வகத்தின் ஆய்வுக்கு பின்னரே மீன்களின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது முழுமையாக தெரியவரும் என்று கூறப்படுகிறது.


Next Story