ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் குதித்து மூதாட்டி தற்கொலை


ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் குதித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 11 Jun 2019 3:45 AM IST (Updated: 11 Jun 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்து உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இந்த தடுப்பணை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் தென்பகுதியில் ஆற்றுக்கு கீழ்புறம் தண்ணீர் வெளியேறும் பகுதியில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்தவர், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ராமு (வயது 70) என்பது தெரிய வந்தது. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி, வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால் ராமு தன்னுடைய கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சுப்பிரமணியனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த ராமு, ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

Next Story