திருச்செந்தூர் அருகே, சமையல் செய்தபோது தீவிபத்து இளம்பெண் கருகி சாவு காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்


திருச்செந்தூர் அருகே, சமையல் செய்தபோது தீவிபத்து இளம்பெண் கருகி சாவு காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Jun 2019 3:30 AM IST (Updated: 11 Jun 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் இளம்பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 34). டி.வி. மெக்கானிக். இவருடைய மனைவி ரெஞ்ஜினி (26). இவர்களுக்கு மகாஸ்ரீ (7) என்ற மகளும், லோகித் செல்வன் (4) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் ரெஞ்ஜினி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்து இருந்த ஆடையில் தீப்பிடித்தது. இதனால் அவர் சத்தம் போட்டார். உடனே விசுவநாதன் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது 2 பேரும் தீயில் கருகி பலத்த காயம் அடைந்தார். அவர்கள் 2 பேரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரெஞ்ஜினி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். விசுவநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story