பாந்திராவில் ஓடும் காரில் சாகசம் செய்த 3 வாலிபர்கள் கைது


பாந்திராவில் ஓடும் காரில் சாகசம் செய்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

பாந்திராவில் ஓடும் காரில் சாகசம் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை பாந்திரா கார்டர்ரோடு பகுதியில் சம்பவத்தன்று இரவு கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த காரில் இருந்த 3 வாலிபர்கள் காரின் கண்ணாடி வழியாக உடலை வெளியே நீட்டிக் கொண்டு சாகசம் செய்து உள்ளனர். மேலும் அவர்களது கையில் மதுபாட்டில்கள் இருந்தன.

இதனை அந்த காருக்கு பின்னால் வந்த காரில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

இதை பார்த்த கார் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், ஓடும் காரில் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் கோவண்டி பகுதியை சேர்ந்த வாலிபர்கள் முகமது சேக்(வயது20), சமீர் சாகிபோலே(20), அனாஸ் சேக்(19) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

Next Story