பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு; 5 பேர் கைது


பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு; 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2019 3:30 AM IST (Updated: 11 Jun 2019 5:32 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அகஸ்தியர் அருவி பகுதியில் போலீஸ் ஏட்டுவிடம் தகராறில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர்கள் பீர்முகம்மது மகன் செய்யது அலி (வயது 28), செல்வராஜ் மகன் ரமேஷ் (35), கருத்தன் மகன் திருமலைக்குமார் (25) மற்றும் கீழகலங்கலை சேர்ந்தவர்கள் வெங்கடாச்சலம் மகன் சிவசக்தி (21), பாண்டி மகன் கடல்குமார் (36) ஆகியோர் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு நேற்று முன்தினம் குளிக்க வந்தனர். அருவியில் குளித்தபோது மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் கூச்சல் போட்டு கொண்டிருந்தனராம்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டு பரமசிவன், அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஏட்டு பரமசிவனிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செய்யது அலி, ரமேஷ், திருமலைக்குமார், சிவசக்தி, கடல்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Next Story