விளாத்திகுளம் தாலுகாவில் ஜமாபந்தி கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு


விளாத்திகுளம் தாலுகாவில் ஜமாபந்தி  கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 6:14 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார்.

ஜமாபந்தி 

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். அவர் முத்துசாமிபுரம், கவுண்டன்பட்டி, சிவலார்பட்டி, வன்னியம்பட்டி, மெட்டில்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, அனியகாரன்பட்டி, குமரசித்தன்பட்டி, சென்னம்பட்டி, வவ்வால்தொத்தி ஆகிய கிராமங்களின் ஆண்டு கணக்குகளை ஆய்வு செய்தார்.

206 மனுக்கள் 

தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் ரே‌ஷன் கார்டு பெறுவதற்காக 4 மனுக்களும், வீட்டுமனை பட்டா கேட்டு 30 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கேட்டு 71 மனுக்களும், பட்டா மாறுதல் சம்பந்தமாக 64 மனுக்களும், உட்பிரிவு 29 மனுக்களும் என மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story