சாத்தான்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் கனிமொழி எம்.பி. உறுதி


சாத்தான்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் கனிமொழி எம்.பி. உறுதி
x
தினத்தந்தி 12 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 7:57 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதி அளித்துள்ளார்.

சாத்தான்குளம், 

சாத்தான்குளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதி அளித்துள்ளார்.

சுற்றுப்பயணம் 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. கடந்த சில நாட்களாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று மாலையில் சாத்தான்குளம் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;–

சாத்தான்குளம் பகுதியில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். கண்டிப்பாக எனது எம்.பி. நிதியில் இருந்து சாத்தான்குளத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரப்படும். என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்காளர்களுக்கு நன்றி 

முன்னதாக அவர் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தைலாபுரம், தோப்பூர், பன்னம்பாறை, புதுக்கிணறு, தோப்புவளம், அன்பின்நகரம், சொக்கன்குடியிருப்பு, தட்டார்மடம், நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, இடைச்சிவிளை, தச்சன்விளை, கடக்குளம், செட்டிவிளை, படுக்கப்பத்து, பெரியதாழை, அழகப்பபுரம், பிச்சிவிளை, சுண்டன்கோட்டை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் மகேந்திரன், சங்கர், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ஜோசப் அலெக்ஸ், தி.மு.க. நகர தலைவர் சித்திரைகுமார், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜோசப், ஒன்றிய நகர செயலாளர் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி பெருமாள், ஒன்றிய பொருளாளர் சந்திரன், இலக்கிய அணி ஒன்றிய சந்திரன், தி.மு.க. மகளிர் அணி ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story