நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலன் கருதி அம்மா திட்டம் என்ற திட்டத்தை அறிவித்தார். இந்த திட்ட முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.
கிராமங்கள்
நெல்லை தாலுகா–சேந்திமங்கலம், அம்பை தாலுகா–அடையக்கருங்குளம், நாங்குநேரி தாலுகா–வடுகச்சிமதில், சேரன்மாதேவி தாலுகா–உலகன்குளம், பாளையங்கோட்டை தாலுகா– பாளையங்கோட்டை பகுதி–3, சங்கரன்கோவில் தாலுகா–கீழநீலிதநல்லூர், திருவேங்கடம் தாலுகா–கே.கரிசல்குளம்.
இந்த கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இதில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் பட்டா மாற்றம் உள்ளிட்ட நிலத்தாவாக்கள் குறித்த மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கலாம். கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story