குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நாகையில் நடந்தது


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 12 Jun 2019 4:00 AM IST (Updated: 12 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் நிறைவடைந்தது.

இதில் நாகை அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக குழந்தை சேவை அமைப்பு மூலம் நடைபெற்ற கையெழுத்து முகாமை கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

துண்டு பிரசுரங்கள்

இதில் நாகை தொழிலாளர் நல உதவி ஆணையர் ஸ்ரீதர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், தாசில்தார் சங்கர், நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அர்ச்சனா, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

Next Story