மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு + "||" + 12 pound chain flush with a woman near the town of Orathanathu

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
ஒரத்தநாடு அருகேபெண்ணிடம்12 பவுன்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் கல்லணைக்கால்வாய் பாலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் நவதானிய வியாபாரி.

இவருடைய மனைவி ரேவதி (வயது42). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.


வீடு புகுந்த மர்ம நபர்

நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையை கொண்டு உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் ரேவதியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணியும் நடந்தது.

இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு 4 பேருக்கு வலைவீச்சு
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலியை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. ஓடும் ரெயிலில் செல்போனை பறித்து விட்டு முதியவரை ஆற்றில் தள்ளிய மர்ம நபர் நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவிலில் ஓடும் ரெயிலில் செல்போனை பறித்துவிட்டு முதியவரை ஆற்றில் தள்ளிவிட்ட மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
3. திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறிக்க முயற்சி
திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்களிடம், வாலிபர்கள் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
4. நாகர்கோவில் பஸ்சில் நகை பறிப்பு சம்பவம்: சென்னையை சேர்ந்த 3 பெண்கள் கைது
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பெண் பயணியிடம் நகை பறித்து தப்ப முயன்ற சென்னையை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஊர், ஊராக சென்று கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
5. அரசு ஊழியரை மிரட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
வேப்பந்தட்டை அருகே அரசு ஊழியரை மிரட்டி 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.