மாவட்ட செய்திகள்

கடல் சீற்றம் எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை + "||" + Sea fury echo: Tourists in Kanyakumari are banned for bathing

கடல் சீற்றம் எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கடல் சீற்றம் எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். ஆனால், மழை மேகங்கள் திரண்டு இருந்ததால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், அவர்கள் முக்கடல் சங்கம கடற்கரையில் ஆனந்த குளியல் போட்டனர்.


அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘வாயு‘ என பெயரிடப்பட்டுள்ளது. புயல் உருவாகியதை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து வந்தனர். ஆனால், சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

குளிக்க தடை

இந்தநிலையில் காலை 10.30 மணிக்கு சீற்றம் காரணமாக 10 முதல் 15 அடி உயர ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆவேசத்துடன் வந்து பாறைகளிலும், கரையில் உள்ள தடுப்பு சுவர் மீதும் மோதியது. இதனால், அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனே வெளியேறும்படி கூறினார்கள். மேலும், கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

படகு போக்குவரத்து ரத்து

ராட்சத அலையின் காரணமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், படகுத்துறைக்கு செல்லும் நுழைவாயிலில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதற்கிடையே ஏற்கனவே விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று இருந்த 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசரமாக படகில் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, வாவத்துறை, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கோவளம், கீழ மணக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க செல்லவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை கண்காணிக்க புதிய போலீஸ் படை பிரிவு விரைவில் தொடக்கம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை கண்காணிக்க புதிய போலீஸ் படைப்பிரிவு தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
2. கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
3. தமிழரான ஈ.பி.எஸ். கடல் கடந்து சாதனை படைத்து உள்ளார்; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
தமிழரான ஈ.பி.எஸ். கடல் கடந்து சாதனை படைத்து உள்ளார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
4. நாகர்கோவில் அருகே பரபரப்பு அழிக்காலில் கடல் நீர் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்தது பொதுமக்கள் அச்சம்
நாகர்கோவில் அருகே அழிக்காலில் நேற்று மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
5. நாகர்கோவில் அருகே கடல்சீற்றம் விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
நாகர்கோவில் அருகே கடல் சீற்றத்தால் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள், தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.