தாராவியில் சாக்கடை மேல் கட்டப்பட்ட குடிசை வீடுகள், கடைகள் இடிப்பு
மும்பை தாராவியில் உள்ள சோசியல் நகரில் தமிழர்கள் உள்பட ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
மும்பை,
சோசியல் நகரில் உள்ள பாதாள சாக்கடை மீது வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையடுத்து அந்த வீடு, கடைகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி சாக்கடை மேல் கட்டப்பட்ட வீடு, கடைகளை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதேபோன்று பாந்திரா பெஹரம்பாடா குடிசை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கடைகளை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story