உடல்நலக்குறைவு அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு


உடல்நலக்குறைவு அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 11 Jun 2019 10:30 PM GMT (Updated: 11 Jun 2019 9:04 PM GMT)

உடல்நலக்குறைவு காரணமாக அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி மஞ்சுளா (55). இவர் கடந்த சில நாட்களாக சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அதற்காக மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி மஞ்சுளா தான் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு மயங்கி கீழே விழுந்தார்.

இதை பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story