வானவில் : ஸ்மார்ட் சுவிட்ச்


வானவில் : ஸ்மார்ட் சுவிட்ச்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:17 AM GMT (Updated: 12 Jun 2019 10:17 AM GMT)

இந்த ஸ்மார்ட் யுகத்தில் நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்விட்சுகளும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமா?

கோல்டுமெடல் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் வை-பை சுவிட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடுகளின் சுவிட்சுகளை கண்ட்ரோல் செய்யலாம். வழக்கமான சுவிட்ச் போல இதை இயக்கலாம். ரிமோட் கண்ட்ரோல் மூலமும் இதை செயல்படுத்தலாம். ஸ்மார்ட்போன் செயலி (ஆப்) மூலம் தொலை தூரத்திலிருந்தும் இதை இயக்க முடியும். அனைத்துக்கும் மேலாக இப்போது புழக்கத்துக்கு வந்துள்ள அமேசான், அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஸ்மார்ட் கருவிகள் மூலமும் இந்த சுவிட்சை செயல்படுத்த முடியும். இதனால் குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த ஸ்விட்சை செயல்படுத்தலாம். இதன் விலை ரூ.5,900-லிருந்து ஆரம்ப மாகிறது.

இந்த சுவிட்சில் மைக்ரோ கண்ட்ரோலர் சிப் உள்ளது. இதன் மூலம் நிரந்தரமாக செயல்படுத்த வேண்டிய பணிகளை செயல்படுத்த முடியும். இத்துடன் ஐவேர்ல்டு மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது கண்ணாடியில் ஆன மேல் பாகத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொடு திரையாக இதை லேசாக தொட்டே செயல்படுத்த முடியும். பின்னணியில் எல்.இ.டி. பொத்தான்கள் உள்ளன.

ஐவேர்ல்டு மொபைல் ஆப்-ஐ கூகுள் அசிஸ்ட் அல்லது அமேசான் அலெக்ஸாவுடன் இணைத்துக் கொள்ள முடியும். அதன் பிறகு குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த சுவிட்சை செயல்படுத்தலாம்.

இந்த புதிய ஸ்மார்ட் ஸ்விட் நான்கு சுவிட்ச் அல்லது இரண்டு சுவிட்சுகளைக் கொண்ட தொகுப்பாக வந்துள்ளது. இதன் மூலம் லைட், பேன் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். பேனின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். முன்னணி மின்சாதன விற்பனையகங்களில் இது கிடைக்கிறது.

Next Story