மாவட்ட செய்திகள்

வானவில் : இசை கற்றுத் தரும் ‘சவுண்ட் பாப்ஸ்’ + "||" + Music teaches Sound pops

வானவில் : இசை கற்றுத் தரும் ‘சவுண்ட் பாப்ஸ்’

வானவில் : இசை கற்றுத் தரும் ‘சவுண்ட் பாப்ஸ்’
குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி பயனுள்ள வகையில் இருக்கும்படி, சில நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த பொம்மை பொருட்கள் வடிவமைப்பாளர் மைக்கேல் டபார் குழந்தைகளுக்குள் இருக்கும் இசை ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு கருவியை உருவாக்கிஉள்ளார். இதன் பெயர் ‘சவுண்ட் பாப்ஸ்’. வெள்ளை பலகையின் மீது பல வண்ணங்களில் பாப்ஸ் என்று சொல்லக்கூடிய வட்ட வடிவ அமைப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரு இசைக் குறிப்பை உள்ளடக்கியுள்ளன.

இந்த அமைப்புகளை குழந்தைகள் மேலும் கீழும் சுற்றி அசைத்து புதுப்புது இசை ஒலியை உருவாக்கி மகிழ்வார்கள். விளையாட்டுடன் கற்றலையும் இணைத்துத் தருவதே இவர்களின் நோக்கம். இந்த விளையாட்டுக் கருவியுடன் தரப்படும் புத்தகத்தை பார்த்து பெற்றோர் குழந்தைகளுக்கு நிறைய கற்றுத் தரலாம்.

குட்டி இசை மேதைகளை உருவாக்கும் இந்த கருவியை ஐ பாட்டில் இருக்கும் இசை செயலிகளுடன் இணைத்துக் கொண்டு எண்ணற்ற புது முயற்சிகளை செய்யலாம். மூன்று வயது பிள்ளைகள் தொடங்கி எல்லா வயதினருக்கும், விளையாட்டாகவே இசையை கற்றுத் தருகிறது இந்த சவுண்ட் பாப்ஸ்.

ஆசிரியரின் தேர்வுகள்...