நெல்லையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் மாவட்ட நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார

நெல்லையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்  மாவட்ட நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார
x
தினத்தந்தி 13 Jun 2019 3:30 AM IST (Updated: 12 Jun 2019 5:36 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பிரசார வாகனம் 

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகமும் இணைந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆகியவை நேற்று நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி 

இதைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழியை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது வாசிக்க, நீதிபதிகள் உள்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதிகள் அருள்முருகன், தாகூர், சந்திரா, நீதிபதிகள் பத்மா, கெங்கராஜன், சுப்பையா. பாபு, கடற்கரை செல்வம், மகேசுவரி வக்கீல் சங்க தலைவர் சிவசூரியநாராயணன், துணை தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் மாரியப்ப காந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேவஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

Next Story