பல்கலைக்கழகத்தில் சிறப்பு துணை தேர்வு எழுத முதுநிலை மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் பதிவாளர் தகவல்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிறப்பு துணை தேர்வு எழுத முதுநிலை மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிறப்பு துணை தேர்வு எழுத முதுநிலை மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
சிறப்பு துணை தேர்வு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் 2016–17–ம் ஆண்டு எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பிற்காக சேர்ந்து, ஏப்ரல்–2019–ல் இறுதி தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் 2017–18–ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பிற்காக சேர்ந்து, ஏப்ரல் 2010–ல் இறுதி தேர்வு எழுதிய மாணவர்களுடைய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மாணவர்கள் தங்கள் படிப்பு காலத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாமல் இருந்தால் அவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு வருகிற 28–ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. கல்லூரிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி ஆண்டிற்கு முன்னர் பயின்ற தனித்தேர்வர்களுக்கு அனுமதி இல்லை.
பதிவிறக்கம்
முதுநிலை மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் 18–ந் தேதி வரை www.msuniv.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்குரிய தேர்வு கட்டணம் ரூ.1000–யை இணையதளம் மூலமாகவே செலுத்த வேண்டும். சிறப்பு துணை தேர்வினை எழுதும் மாணவர்கள் அதற்குரிய அனுமதி சீட்டினை வருகிற 24–ந் தேதி முதல் www.msuniv.ac.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவலாகவும் அனுப்பப்படும். இந்த தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நடைபெறும்.
இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story