மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார் + "||" + The District Panchayat Board member has issued a report on local elections

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீட்டை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார்.
நாகப்பட்டினம்,

உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 214 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக இட ஒதுக்கீடு தமிழக அரசினால் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டது.


அதனை தொடர்ந்து தற்போது நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3 ஆயிரத்து 426 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக வார்டு வாரியான இட ஒதுக்கீட்டினை நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார். இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் பெற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கூடுதல் திட்ட இயக்குனர் (கஜா புயல் மறுவாழ்வு, மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு) பிரதீப் குமார், நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ஆறுமுகம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.
2. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
4. காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு
நோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
5. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் கலெக்டர் ஆய்வு செய்வதாக உறுதி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை