குடோனில் பதுக்கப்பட்ட ரூ.1 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் : ஒருவர் கைது
மும்பை சிராபஜாரில் உள்ள குடோனில் வெளிநாட்டு சிகரெட் பார்சல்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மும்பை,
அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள குடோனிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 60 பார்சல்களில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மொத்தம் அந்த பார்சல்களில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 120 சிகரெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 1 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் வெளிநாட்டு சிகரெட் பார்சல்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த பிபின் சிங் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோர்ட்டு அவரை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story