மாவட்ட செய்திகள்

சத்துவாச்சாரி, வாலாஜாவில் வீடுகளில் கொள்ளையடித்தவடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது + "||" + Suthu Chakari, in the house of Walajja Three people in the North are arrested

சத்துவாச்சாரி, வாலாஜாவில் வீடுகளில் கொள்ளையடித்தவடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

சத்துவாச்சாரி, வாலாஜாவில் வீடுகளில் கொள்ளையடித்தவடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
வேலூர் சத்துவாச்சாரி, வாலாஜாவில் வீடுகளில் கொள்ளையடித்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் சங்கிலி, 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரியில் வசித்து வருபவர்கள் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மார்க்கபந்துவின் மகன்கள் எழில்மாறன், புகழேந்தி. இவர்களின் வீடுகள் மற்றும் வள்ளலார் 6 வழிச்சாலையில் வசிக்கும் டாக்டர் அப்பு, தொழிலதிபர் ஜெகநாதன் ஆகியோரின் வீடுகளில் கடந்த 3-ந் தேதி இரவு மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர்.

4 வீடுகளிலும் நடந்த கொள்ளை சம்பவம் ஒரே மாதிரியாக இருந்தது. எனவே இந்த கொள்ளை சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தன. அவர்களை, போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினரின் முதற்கட்ட விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து தனிப்படையினர் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கி வேலை பார்க்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலை சேகரித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ேவலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கோட்டை சுற்றுச்சாலையில் இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் வாகனத்தை பார்த்ததும் தப்பியோடினர். அதனால் சந்தேகம் அடைந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

3 பேரும் மத்திய பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தை ேசர்ந்த சுனில் (வயது 23), மகேந்தர் (40), காளிசரண் (34) என தெரிய வந்தது. 3 பேரும் கடந்த 3-ந் தேதி சத்துவாச்சாரி, வள்ளலாரில் மேற்கண்டோரின் வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அதேபோல் கடந்த மாதம் 26 மற்றும் 31-ந் தேதிகளில் வாலாஜாவில் உள்ள ஓரிரு வீடுகளின் ஜன்னலை உடைத்து கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் சங்கிலி, ரூ.40 ஆயிரம், 2 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதான 3 பேரும் பகலில் பல்ேவறு பகுதிகளுக்குச் ெசன்று பலூன், மின்விளக்குகள் ஆகியவை விற்பதுபோல் நடித்து பூட்டிக் கிடக்கும் பெரிய வீடுகளை நோட்டமிட்டு வருவார்கள்.

பின்னர் இரவில் சென்று பூட்டிக்கிடக்கும் வீடுகளின் ஜன்னல் வழியாக உள்ேள கவட்டை மூலம் கல் அடிப்பார்கள். வீடுகளில் இருப்போர் கல் சத்தம் கேட்டு மின்விளக்குகளை எரிய விட்டால், அந்த வீட்டில் திருட மாட்டார்கள்.

மாறாக மின்விளக்குகள் எரியா விட்டால் அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து மற்ற அறைகளை வெளிப்புறமாக பூட்டி விட்டு நகை, பணத்தை கொள்ளையடிப்பார்கள்.

இவ்வாறு போலீசார் கூறினர்.