ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தகவல்


ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:15 PM GMT (Updated: 13 Jun 2019 5:38 PM GMT)

ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் வேலூர் சாலையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்கா அருகில் திறந்தவெளி மைதானத்தில் 22-வது ஜவ்வாதுமலை கோடை விழா நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்), திருவண்ணாமலை மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கோடை விழா நடைபெறும் 2 நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் திருவண்ணாமலை, போளூர், ஆரணி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Next Story