மாவட்ட செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகேகார் மோதி வாலிபர் பலிமனைவி படுகாயம் + "||" + Near accarappakkam Car kills young guy The wife was injured

அச்சரப்பாக்கம் அருகேகார் மோதி வாலிபர் பலிமனைவி படுகாயம்

அச்சரப்பாக்கம் அருகேகார் மோதி வாலிபர் பலிமனைவி படுகாயம்
அச்சரப்பாக்கம் அருகே கார் சக்கரத்தில் சிக்கி சாலையோரம் படுத்திருந்தவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் சாலையோரம் கயப்பாக்கத்தை சேர்ந்த அருண் (வயது 26), அவரது மனைவி முத்தாலு (25) தங்கள் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று காலை அந்த வழியாக வேகமாக வந்த காரின் டயர் பழுதாகி இரும்பு தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு சாலையோரம் படுத்திருந்த அருண், மற்றும் அவரது மனைவி முத்தாலு மீது மோதியது.

இதில் அருண் கார் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார், அவரது மனைவி முத்தாலு படுகாயம் அடைந்தார் அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அச்சப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் அமலநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். படுகாயம் அடைந்து தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.