மயிலாப்பூரில் துணிகரம் ஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் ரூ.15 லட்சம் நகை கொள்ளை வேலைக்கார பெண்ணிடம் விசாரணை
மயிலாப்பூரில் ஐசரி கணேசின் சகோதரி வீட்டில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாறு,
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ரங்கா ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 50). பிரபல கல்வியாளரும், நடிகர் சங்கத்தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேசின் சகோதரி ஆவார்.
மகாலட்சுமி தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் வைத்திருந்தார். இந்த நகைகள் திடீரென மாயமானது. இதனை யாரும் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று அவர் சந்தேகப்பட்டார்.
ஆனால் வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் வராத நிலையில் இந்த நகைகள் சிறுகசிறுக திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த மகாலட்சுமி நகைகள் திருடப்பட்டது குறித்து அபிராமபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் கடந்த 15 ஆண்டுகளாக மகாலட்சுமியின் வீட்டில் வேலை பார்த்து வரும் வேலைக்கார பெண் சுதா (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story