வீண் விமர்சனத்தால் தேர்தலில் தோல்வி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


வீண் விமர்சனத்தால் தேர்தலில் தோல்வி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 10:19 PM GMT)

வீண் விமர்சனத்தால் அ.தி.மு.க. தேர்தலில் தோல்வி அடைந்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயலில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு வங்கியை திறந்து வைத்து 432 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிப்பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வீண் விமர்சனத்தால் தேர்தலில் தோல்வி அடைந்தோம். கடந்த ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கியில் நகை, பத்திரம் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.

வங்கி கிளைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. கடந்த 1930-ம் ஆண்டு 3 கிளைகளோடு கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. தற்போது 69-வது வங்கி கிளை தொடங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து மானியம் பெற்று செயல்படுத்தியது.

இந்த மானியத்தை கடந்த 2013-ம் ஆண்டே மத்திய அரசு நிறுத்தி விட்டது. தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட ரேஷன் பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. தேசிய, தனியார் வங்கிகளில் உள்ளது போன்று அனைத்து வசதிகளும் கூட்டுறவு வங்கியில் உள்ளது.

இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Next Story